அவல் வெல்ல அல்வா
தேவையான பொருட்கள்
அவல் 1கப்
துருவிய தேங்காய் 1கப்
வெல்லம் 1கப்
பால் 1கப்
நெய் சுமார் அரை கப்
முந்திரி, கசகசா, ஏலக்காய் தேவைக்கேற்ப
செய்முறை
அவலை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைத்து வடிய விடவும்.வடிந்ததும் அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.
மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு அரைத்த அவல் கலவையை சேர்த்துக் கிளறவும்.
2 நிமிடம் கிளறியதும் வெல்லத்தையும் சேர்த்து, இடையிடையே நெய் விட்டுக் கிளறவும்.
ஒட்டாமல் சுருண்டு வரும் போது முந்திரியைக் கலந்து நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.
அதன் மேல் கசகசாவைத் தூவி, ஆறிய பின் வில்லை போடவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
பிரியாணி மசாலா பொடி
தேவையான பொருட்கள்
ஏலக்காய் 15
கிராம்பு 15
லவங்கப் பட்டை 1 இன்ச்
ஜாதிக்காய் ஒரு சிறிய துண்டு
ஜாதிபத்ரி 3
ஜீரகம் ஒன்றரை டீஸ்பூன்
சோம்பு அரை டீஸ்பூன் (optional )
கருஞ்சீரகம் 1 டீஸ்பூன்
மராத்தி மொக்கு ஒன்றரை
கல் பாசி 5
ஸ்டார் அனீஸ் (அன்னாசிப்பூ/ நட்சத்திர சோம்பு) 3
செய்முறை
அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் 2 நிமிடம் வரை வறுக்கவும். புகையாமல்/ கருகாமல் பார்த்துக்கொள்ளவும்.
நன்றாக ஆறிய பின்னர் மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
1 கப் அரிசி + ஒன்றரை கப் காய்கறிகளுக்கு இந்த மசாலா போடி 1 டீஸ்பூன் போதுமானதாக இருக்கும்.
No comments:
Post a Comment