Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Thursday, July 9, 2020

குறிப்புகள்



  • இஞ்சி பூண்டு அரைப்பதற்க்கு பதிலாக துருவி உபயோகித்தால் உணவில் நல்ல மணம் கிடைக்கும்.

  • காலிஃப்ளவரை சிறு பூக்களாக உதிர்த்து வினிகர் கலந்த நீரில் போட்டு வைத்தால் புழுக்கள் வெளியேறும்.

  • காலிஃப்ளவர் சமைக்கும்போது நிறம் மாறாமல் இருக்க, 2 டீஸ்பூன் பால் விட்டு சமைக்க வேண்டும்.

  • கீரையை பிரஷர் குக்கரில் வேக வைக்கும்போது, வெயிட் போடாமல் ஸ்டீம் மட்டும் செய்தால் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும்.

  • புதிய பாத்திரத்தில் ஒட்டியுள்ள ஸ்டிக்கரை சுலபமாக எடுக்க, ஸ்டிக்கரில் சிறிது எண்ணை தடவி 2 நிமிடம் மெழுகு அணலில் காட்ட, ஸ்டிக்கர் சுலபமாக பிரிந்து வரும்.

  • கொத்தமல்லி தண்டு மற்றும் வேர் பகுதியை மண் போக சுத்தம் செய்து, வெய்யிலில் உலர்த்தவும். நன்கு காய்ந்தவுடன், தேங்காய் எண்ணையில் போட்டு, அந்த எண்ணையை ஒரு நாள் வெய்யிலில் வைக்கவும். இந்த எண்ணையை தினமும் தடவி வார, தலையில் சூடு நீங்கும்; தலை வழி நீங்கும்; தலை முடி மென்மையாக இருக்கும்.

  • எலுமிச்சை சாற்றை கத்தியில் தடவி வெண்டைக்காய் நறுக்கினால், கதியில் ஒட்டாமலும், கத்தி கொழக்கொழப்பாகமலும் இருக்கும்.

  • குர்மா மற்றும் பிற கிரேவி வகைகளுக்கு தேங்காய் மற்றும் முந்திரி அரைத்து விடுவாதற்க்கு பதிலாக, கேரட் மற்றும் பூசணி/ தர்பூசனி விதையை ஆரைத்து விட்டால் உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது.

  • கொத்தமல்லி மற்றும் புதினா சட்னி அறைக்கும்போது தண்ணீர்க்கு பதிலாக, ஐஸ் க்யூப் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாரு சேர்த்து அரைத்தால் சட்னி நிறம் மாறாமல் இருக்கும்.

  • பொறித்த அப்பளம் மீந்து விட்டால், அதை பொடியாக நொறுக்கி, அதில் இனடிஜி பூண்டு பச்சை மிளகாய் விழுது, கெட்சப், கொத்தமல்லி, தேவைககர்ப்ப உப்பு சேர்த்து, சிறு உருண்டைகளாக உருட்வும். இந்த உருண்டைகளை கரைத்த மைதா மாவில் தோய்த்து பொரித்தெடுத்தால், அருமையான ஸ்நாக்ஸ் தயார்.

  • பாதிரத்தில் அடி பிடித்த கரையை சுலபமாக நீக்க, கரையில் பாத்திரம் துலக்கும் சோப் தடவி, பாத்திரத்தை 5 நிமிடம் கவிழ்த்து வைத்து பின் கழுவ வேண்டும்.

  • சமைகக்கும் போது அடுப்பின் பின் உள்ள சுவற்றில் பிசுக்கு படியும். இதைத் தவிர்க்க cling film எனப்படும் பிளாஸ்டிக் பேப்பரை சுவற்றில் ஒட்டி வைக்கலாம். இதை மாதம் இருமுறை மாற்றிக் கொள்ளலாம்.

  • புதிதாக உரையா வைக்கும் தயிர் புளிக்காமல் இருக்க, 1 காய்ந்த மிளகாயை போட்டு வைக்கலாம்.

  • தேன்குழல், முறுக்கு போன்ற பட்சணங்களை தேங்காய் எண்ணையில் பொரித்தால் அவை நீண்ட நாட்கள் சிக்கு வாடை வராமல் இருக்கும்.

  • எள்ளிள் பூச்சி வராமல் இருக்க, 4 அல்லது 5 காய்ந்த மிளகாயை போட்டு வைக்கலாம்.

  • பூண்டு, வெங்காயம் நரறுக்கும்போது, கையில் அந்த வாடை நீங்க, கைகளில் வினிகர் தடவி கழுவலாம்.

  • தண்ணீரில் பூக்கள் போட்டு அலங்காரத்திற்கு வைக்கும்போது, அந்த தண்ணீரில் 1 அல்லது 2 ஆஸ்பிரின் மாத்திரைகளை போட்டு வைத்தால் பூக்கள் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.

  • கையில் நல்லெண்ணை தடவிக்கொண்டு மிளகாய் கிள்ளுவதோ, அரைப்பதோ செய்தால் கைகள் எரிச்சல் அடையாமல் இருக்கும்.

  • கல்லுப்பு நாளடைவில் ஈரப்பதம் அடைந்து விடும். இதை தடுப்பதற்க்கு, உப்பில் 1 அல்லது 2 காய்ந்த மிளகாய் போட்டு வைக்கலாம்.

  • வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, பன்னர் தூண்டங்களை 10 நிமிடம் போட்டு வைதால், பன்னர் மிகவுள் ம்ருதுவாக இருக்கும்.  



Tuesday, November 8, 2016

பறங்கி சர்க்கரைவள்ளி சூப்

துண்டுகளாக நறுக்கிய காய்கறிகள்:

பறங்கிக்காய்.                               1/4 கப்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு     1/4 கப்
சுரைக்காய்.                                    1/4 கப்
வெங்காயம்.                                   2
நெய் +எண்ணெய்.                      2 தேக்கரண்டி 
உப்பு, மஞ்சள் பொடி.                 தேவைக்கேற்ப
மிளகு, சீரகப் பொடி.                   2 தேக்கரண்டி 
கொத்தமல்லி நறுக்கியது        2 தேக்கரண்டி 
பெருங்காயம்.                             1/2 தேக்கரண்டி 

  1. குக்கரில் நெய், எண்ணெய் விட்டு பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வறுத்து வெங்காயம் சேர்க்கவும்.
  2. பொன்னிறமாக வதங்கியதும் பறங்கிக்காய், சுரைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து வதக்கி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.
  3. குக்கரை மூடி 3விஸில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  4. நன்கு ஆறியதும் ப்ளெண்டர் (அ) மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டவும். வடிகட்டியதை அடுப்பிலேற்றி கொதிக்க விடவும்.
  5. கொதிக்க ஆரம்பித்ததும் மிளகு, சீரகப்பொடி, கொத்தமல்லி தூவி இறக்கி சூடாக பறிமாறவும்.

Friday, November 4, 2016

வற்றல்கள்

பாகற்காயை வடடமாக நறுக்கி விதை நீக்கி, மூன்று நாட்கள் வெயிலில் உலர்த்தவும்.

அதன் பின் மோரில் தேவையான உப்பு சேர்த்து பாகற்காயை ஊற விடவும்.

மறுநாள் மோரிலிருந்து எடுத்து வெயிலில் உலர்த்தி, மாலையில் அதே மோரில் ஊறவைத்து அடுத்தநாள் வெயிலில் உலர்த்தவும்

மோர் முழுவதும் உறிஞ்சும் வரை ஊறவைத்துக் காய வைத்து எடுத்து வைக்கவும்.

இந்த வற்றலை எண்ணெயில் பொறித்து வத்தக் குழம்பு, பருப்பு சாம்பார் மற்றும் மோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள என பயன்படுத்தலாம்.

இதே முறையில் கோவைக்காய் வற்றல் போடலாம்.

Tuesday, November 1, 2016

ஆரோக்யக் குறிப்பு

ஜீரணப் பொடி:-
தேவையான பொருட்கள் 

மிளகு.             1மேஜைக்கரண்டி

சீரகம்.              1மேஜைக்கரண்டி

வெந்தயம்.       1மேஜைக்கரண்டி

ஓமம்.                1மேஜைக் கரண்டி

பெருங்காயம்    சுண்டைக்காயளவு

செய்முறை 

மேற்குறிப்பிட்ட ஐந்து பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் நைஸாக 
அரைத்து வைத்துக்கொள்ளவும். 

தினமும் எலுமிச்சை அளவு சாதத்தில் ஒரு ஸ்பூன் அரைத்த பொடி, நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர ஜீரணக்கோளாறுகள் நீங்கும்

Thursday, October 27, 2016

புதினா பொடி

புதினா பொடி:−1

புதினாவை மண்போக அலம்பி் ஆய்ந்து  துணியில் பரத்தி வீட்டிற்குள் இரண்டு நாட்கள் காயவிடவும்.

அதன்பின் ஒருதட்டில் போட்டு அதன் மேல், துணியால் மூடி மொறு மொறுவென காயும் வரை வெயிலில் வைக்கவும்.

காய்ந்ததும் மிக்ஸியில் இட்டுப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

புதினா வாங்கமுடியாத நேரத்தில் இந்த பொடியை பயன் படுத்தலாம்.

புதினா பொடி:−2

காயவைத்த புதினா இலை   1கப்

உளுத்தம் பருப்பு                      1டீஸ்பூன்

கடலைப் பருப்பு                         1டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்                       3(அ)4

பெருங்காயம், உப்பு                   சிறிது

வாணலியில் எண்ணெய் சூடாக்கி புதினா தவிர மேற்சொன்ன நான்கையும் சிவக்க வறுத்து ஆறயபின் மிக்ஸியிலிட்டு  பொடி செய்யவும்.

ரவை பதத்தில் அரைந்ததும் உப்பு புதினா இலைகளைப் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

இந்த பொடியில் சாதம் பிசைந்து சாப்பிடலாம்.

தோசைக் கல்லில் மாவைப் பரத்தி அதன் மேல் புதினா பொடி தூவி எண்ணெய் விட்டு மூடியால் மூடவும். தோசை வெந்ததும் திருப்பிப் போடாமல் சூடாக பறிமாறவும்.

கத்தரிக்காய் க்ரேவி

தேவையானவை 

நீளவாகில் நறுக்கிய கத்தரிக்காய்       1கப்

தேங்காய்த் துருவல்                       3 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்        3

கொத்தமல்லி             1/4 கப்

இஞ்சி  சிறிய துண்டு

தாளிக்க:


கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய்

அரைக்க 

தேங்காய்த் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.


செய்முறை 

வாணலியில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பருப்புகள் மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

பருப்பு சிவந்ததும் மஞ்சள் பொடி,கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். 

பொன்னிறமாய் வதங்கியதும் அரைத்தவிழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். 

பச்சை வாசனை போனவுடன் தேவையான பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.

கத்தரிக்காய் க்ரேவியை சாதம், சப்பாத்தி, தோசையுடன் பரிமாறலாம்.

Wednesday, October 26, 2016

இனிப்பு துக்கடா

தேவையான பொருட்கள்
பால் 1/2 கப்
நெய்   1/2கப்
பொடித்த சர்க்கரை 1/2கப்
மைதா(சுமார்) 3/4கப்
எண்ணைய்  பொறிப்பதற்கு
செய்முறை
பால் ,சர்க்கரை, நெய் மூன்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி கரண்டியால் கிளறவும்.
சரக்கரை கரைந்ததும் (கலவையை கொதிக்க விடக்கூடாது) அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
நன்கு ஆறியதும் மைதாவைக்கலந்து சப்பாத்தி மாவை விட சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின்பு மாவை சப்பாத்தியாகத் திரட்டி சதுரம் (அ) டைமன் வடிவில் சற்று பருமனான துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
எண்ணெயைக் காயவைத்து வெட்டிய துண்டுகளைப் பொன்னிறமாகப் பொறித்தெடுக்கவும்.
நெய் சேர்க்க விரும்பாதவர்கள் அதே அளவுக்கு சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
                                

Tuesday, October 25, 2016

கதலி/ வாழைப்பழ பாயசம்


வட்டமாக நறுக்கிய வாழைப்பழம்  1கப், வெல்லம் 1/2 கப், 

தேங்காய்ப்பால் 2கப்,

நெய் 3 டேபிள் ஸ்பூன்,

முந்திரி ஏலம் தேவைக்கேற்ப.    

கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி நெய்விடவும்.

காய்ந்ததும் வெல்லத்தை நெய்யில் சேர்துக்கிளறவும்(தண்ணீர் விடவேண்டாம்).

வெல்லம் பாகு பதம் வரும்போது வாழைப்பழத்தை சேர்த்து சுருள வதக்கவும்.

வதங்கியதும் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

ஏலப்பொடி முந்திரி சேர்க்கவும்.

வெந்தய மகிமை

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறு நாள் தண்ணீரை வடிக்கவும். அதனை துணியில் போட்டு முடிந்து காற்றுப்புகாத டப்பாவில் வெந்தய முடிச்சை வைத்து மூடி, அறையின் வெப்பநிலையில் வைக்கவும். மறுநாள் வெந்தயத்தை எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி ஃபரிட்ஜில் வைக்கவும். நீளமாக முளைத்து வந்ததும் அன்றாடம் ஒரு ஸ்பூன் அளவுக்கு வாயிலிட்டுக் கடித்து சாப்பிடவும். கசப்பு தெரியாது. அல்சர், சர்க்கரை நோய், அதிக உஷ்ணம் போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகும்.

Monday, October 24, 2016

Broken rice kesari Recipe

அரிசி நொய் கேசரி/ BROKEN RICE KESARI 

அரிசி நொய்/ BROKEN RICE - 1 கப்/ CUP

(அரிசியை நன்றாக களைந்து நிழலில் உலர்த்தி ரவையாக அரைத்துக் கொள்ளவும்)

(FOR BROKEN RICE : WASH AND DRAIN RICE. DRY THEN UNDER THE FAN UNTIL IT IS COMPLETELY DRY. THEN GRIND THEM IN THE MIXER GRINDER INTO A COARSE RAVA LIKE POWDER. SIEVE AND USE THE BIGGER PARTICLES.)

தண்ணீர் / WATER  - 1.25 கப்/ 1.25 CUPS

பால் / MILK   - 2 டீ ஸ்பூன் / 2 TEASPOONS

குங்குமப்பூ / ஆரஞ்சு ஃபுட் கலர் // 
SAFFRON OR ORANGE FOOD COLOUR     -      ஒரு சிட்டிகை/ A PINCH

சர்க்கரை / SUGAR      -   1 கப் / 1 CUP

நெய்/ GHEE  - 2  டேபிள் ஸ்பூன் / 2 TABLE SPOONS

முந்திரி/ திராட்சை // CASHEW & DRY GRAPES  -  தலா 10 / 10 EACH

ஏலக்காய் / ELAICHI - 2-3 (பொடித்து) / 2 - 3 (POWDERED) 

பச்சை கற்பூரம் / SYNTHETIC CAMPHOR -  ஒரு சிட்டிகை/ A PINCH 

செய்முறை/ METHOD

அரிசி நொய்யை 1.25 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 5 விசில்கள் வரவைக்கவும்.

PRESSURE COOK BROKEN RICE WITH 1.25 CUPS WATER UNTIL 5 WHISTLES OR UNTIL IT IS DONE. 

பாலுடன் குங்குமப்பூவை கலந்து வைத்துக்கொள்ளவும். 

MIX SAFFRON WITH MILK AND KEEP ASIDE.

அடி கனமான பாத்திரத்தில் வெந்த ரவை  சேர்க்கவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

IN A HEAVY BOTTOMED PAN, ADD THE COOKED BROKEN RICE AND SUGAR.

சர்க்கரை கரைந்து கொதிக்கும் பொழுது, குங்குமப்பூ கலந்த பால், ஏலக்காய், பச்சை கற்பூரம் சேர்க்கவும். 

WHEN THE SUGAR DISSOLVES AND STARTS TO BOIL, ADD THE MILK, ELAICHI AND SYNTHETIC CAMPHOR. 

2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

ADD 2 TABLESPOONS OF GHEE. KEEP STIRRING UNTIL THE KESARI LEAVES SIDES OF THE PAN. 

அடுப்பிலிருந்து இறக்கி, முந்திரி திராட்சையை மீதம் உள்ள நெய்யில் வறுத்து கேசரியின் மீது தூவவும். 

REMOVE FROM FLAME. TEMPER WITH ROASTED CASHEW AND DRY GRAPES.
  
இந்த அரிசி நோய் கேசரியை சூடாகவும், குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

THIS KESARI CAN BE SERVED HOT OR COLD.







Friday, October 21, 2016

Halwa recipe

அவல்  வெல்ல அல்வா 


தேவையான பொருட்கள்  


அவல்                                   1கப்

 துருவிய தேங்காய்     1கப்

வெல்லம்                           1கப்

பால்                                     1கப்

நெய் சுமார்         அரை கப்

முந்திரி, கசகசா, ஏலக்காய்   தேவைக்கேற்ப


செய்முறை 

அவலை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைத்து வடிய விடவும்.

வடிந்ததும் அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.

மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு அரைத்த அவல் கலவையை சேர்த்துக் கிளறவும்.

2 நிமிடம் கிளறியதும் வெல்லத்தையும் சேர்த்து, இடையிடையே நெய் விட்டுக் கிளறவும்.

ஒட்டாமல் சுருண்டு வரும் போது முந்திரியைக் கலந்து நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.

அதன் மேல் கசகசாவைத் தூவி, ஆறிய பின் வில்லை போடவும்.



--------------------------------------------------------------------------------------------------------------------------
பிரியாணி மசாலா பொடி 

தேவையான பொருட்கள்  

ஏலக்காய்      15

கிராம்பு          15

லவங்கப் பட்டை    1 இன்ச் 

ஜாதிக்காய்   ஒரு சிறிய துண்டு 

ஜாதிபத்ரி  3

ஜீரகம்        ஒன்றரை டீஸ்பூன் 

சோம்பு     அரை டீஸ்பூன் (optional )

கருஞ்சீரகம்   1 டீஸ்பூன் 

மராத்தி மொக்கு  ஒன்றரை

கல் பாசி   5

ஸ்டார் அனீஸ் (அன்னாசிப்பூ/ நட்சத்திர சோம்பு)    3


செய்முறை
 

அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் 2 நிமிடம் வரை வறுக்கவும்.  புகையாமல்/ கருகாமல்  பார்த்துக்கொள்ளவும். 

நன்றாக ஆறிய பின்னர் மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

1 கப் அரிசி ஒன்றரை கப் காய்கறிகளுக்கு இந்த மசாலா போடி 1 டீஸ்பூன் போதுமானதாக இருக்கும்.