Thursday, October 27, 2016

புதினா பொடி

புதினா பொடி:−1

புதினாவை மண்போக அலம்பி் ஆய்ந்து  துணியில் பரத்தி வீட்டிற்குள் இரண்டு நாட்கள் காயவிடவும்.

அதன்பின் ஒருதட்டில் போட்டு அதன் மேல், துணியால் மூடி மொறு மொறுவென காயும் வரை வெயிலில் வைக்கவும்.

காய்ந்ததும் மிக்ஸியில் இட்டுப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

புதினா வாங்கமுடியாத நேரத்தில் இந்த பொடியை பயன் படுத்தலாம்.

புதினா பொடி:−2

காயவைத்த புதினா இலை   1கப்

உளுத்தம் பருப்பு                      1டீஸ்பூன்

கடலைப் பருப்பு                         1டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்                       3(அ)4

பெருங்காயம், உப்பு                   சிறிது

வாணலியில் எண்ணெய் சூடாக்கி புதினா தவிர மேற்சொன்ன நான்கையும் சிவக்க வறுத்து ஆறயபின் மிக்ஸியிலிட்டு  பொடி செய்யவும்.

ரவை பதத்தில் அரைந்ததும் உப்பு புதினா இலைகளைப் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

இந்த பொடியில் சாதம் பிசைந்து சாப்பிடலாம்.

தோசைக் கல்லில் மாவைப் பரத்தி அதன் மேல் புதினா பொடி தூவி எண்ணெய் விட்டு மூடியால் மூடவும். தோசை வெந்ததும் திருப்பிப் போடாமல் சூடாக பறிமாறவும்.

No comments:

Post a Comment