தேவையானவை
நீளவாகில் நறுக்கிய கத்தரிக்காய் 1கப்
தேங்காய்த் துருவல் 3 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 3
கொத்தமல்லி 1/4 கப்
இஞ்சி சிறிய துண்டு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய்
அரைக்க
தேங்காய்த் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை
வாணலியில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பருப்புகள் மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் மஞ்சள் பொடி,கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பொன்னிறமாய் வதங்கியதும் அரைத்தவிழுது, உப்பு சேர்த்துக் கிளறவும்.
பச்சை வாசனை போனவுடன் தேவையான பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
கத்தரிக்காய் க்ரேவியை சாதம், சப்பாத்தி, தோசையுடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment