வட்டமாக நறுக்கிய வாழைப்பழம் 1கப், வெல்லம் 1/2 கப்,
தேங்காய்ப்பால் 2கப்,
நெய் 3 டேபிள் ஸ்பூன்,
முந்திரி ஏலம் தேவைக்கேற்ப.
கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி நெய்விடவும்.
காய்ந்ததும் வெல்லத்தை நெய்யில் சேர்துக்கிளறவும்(தண்ணீர் விடவேண்டாம்).
வெல்லம் பாகு பதம் வரும்போது வாழைப்பழத்தை சேர்த்து சுருள வதக்கவும்.
வதங்கியதும் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ஏலப்பொடி முந்திரி சேர்க்கவும்.
No comments:
Post a Comment