துண்டுகளாக நறுக்கிய காய்கறிகள்:
பறங்கிக்காய். 1/4 கப்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு 1/4 கப்
சுரைக்காய். 1/4 கப்
வெங்காயம். 2
நெய் +எண்ணெய். 2 தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் பொடி. தேவைக்கேற்ப
மிளகு, சீரகப் பொடி. 2 தேக்கரண்டி
கொத்தமல்லி நறுக்கியது 2 தேக்கரண்டி
பெருங்காயம். 1/2 தேக்கரண்டி
- குக்கரில் நெய், எண்ணெய் விட்டு பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வறுத்து வெங்காயம் சேர்க்கவும்.
- பொன்னிறமாக வதங்கியதும் பறங்கிக்காய், சுரைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து வதக்கி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.
- குக்கரை மூடி 3விஸில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- நன்கு ஆறியதும் ப்ளெண்டர் (அ) மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டவும். வடிகட்டியதை அடுப்பிலேற்றி கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் மிளகு, சீரகப்பொடி, கொத்தமல்லி தூவி இறக்கி சூடாக பறிமாறவும்.
No comments:
Post a Comment