ஜீரணப் பொடி:-
தேவையான பொருட்கள்
மிளகு. 1மேஜைக்கரண்டி
சீரகம். 1மேஜைக்கரண்டி
வெந்தயம். 1மேஜைக்கரண்டி
ஓமம். 1மேஜைக் கரண்டி
பெருங்காயம் சுண்டைக்காயளவு
செய்முறை
மேற்குறிப்பிட்ட ஐந்து பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் நைஸாக
அரைத்து வைத்துக்கொள்ளவும்.
தினமும் எலுமிச்சை அளவு சாதத்தில் ஒரு ஸ்பூன் அரைத்த பொடி, நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர ஜீரணக்கோளாறுகள் நீங்கும்
No comments:
Post a Comment